சாதி வெறி..! பெற்ற மகள் உயிரோடு இருக்கும்போதே இறுதிச்சடங்கு செய்த தந்தை… சாதி மறுப்புத் திருமணத்தால் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சாதி வெறி..! பெற்ற மகள் உயிரோடு இருக்கும்போதே இறுதிச்சடங்கு செய்த தந்தை… சாதி மறுப்புத் திருமணத்தால் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

Published

on

உத்தர பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் நேஹா, தனது பெற்றோரின் பலத்த எதிர்ப்பையும் மீறி, மாற்றுச் சாதியைச் சேர்ந்த சாவன் என்பவரைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தை நேஹாவின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்த நிலையில், இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.

திருமணத்திற்குப் பிறகும் நேஹாவின் குடும்பத்தினர் அவரைத் தங்களோடு வருமாறு பலமுறை அழைத்துள்ளனர். இருப்பினும், நேஹா தனது கணவருடன் வாழ்வதில் உறுதியாக இருந்து குடும்பத்தினரின் கோரிக்கையை நிராகரித்தார். இதனால் அவரது தந்தை பிரகாஷ் சிங் கடும் ஆத்திரமும், கடுமையான மன உளைச்சலும் அடைந்தார்.

Advertisement

தனது பேச்சை மீறிச் சென்ற மகள் இனி தனக்கு உயிரோடு இல்லை எனக் கருதிய தந்தை, நேஹாவிற்கு முறைப்படி இறுதிச்சடங்கு செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பெற்ற மகளை வாழும் போதே இறந்ததாகக் கருதி தந்தை செய்த இந்த காரியம் ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in