வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம்… மூளை கூட இல்லாம சுத்தும் முட்டாள்கள்… தவெக அமைச்சரவையை விமர்சித்த ஸ்டாலின்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம்… மூளை கூட இல்லாம சுத்தும் முட்டாள்கள்… தவெக அமைச்சரவையை விமர்சித்த ஸ்டாலின்..!!!

Published

on

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் தொடர் மின்வெட்டு ஆகிய பிரச்சினைகளுக்காக தவெக அரசை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமரிசித்துள்ளார். தவெக ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும் முதலிடத்திற்குச் சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தத் தெரியாத அமைச்சரவை, விலைவாசி உயரவே இல்லை என்று பொய் கூறி மக்களை ஏமாற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மின்வெட்டுப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் எச்சரித்தும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தற்போதைய மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட முதலமைச்சர் லண்டன் பறந்துவிட்டார் என்றும் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். தற்போதைய நிலையில் வெளிச்சந்தையில் ஒரு யூனிட் 35 ரூபாய் என்ற மிக அதிக விலைக்கு மின்சாரம் வாங்க தவெக அரசு திட்டமிட்டுள்ளது என்றும், இது திமுக ஆட்சியில் போடப்பட்ட குறைந்த விலை ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் ஊழல் நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Advertisement

விவசாயப் பிரச்சினையில் ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணை தவறான தேதியில் திறக்கப்பட்டதால் டெல்டா விவசாயிகள் நீரின்றித் தவிப்பதாகக் கூறியுள்ள அவர், தவெக அமைச்சரவை என்பது “வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி கொளுத்தி விடுவதைப் போல” முன்யோசனையும் மூளையும் இல்லாத மூடர் கூட்டமாகச் செயல்படுகிறது என விவரித்துள்ளார். முதலமைச்சர் உடுப்பி, லண்டன், விஜயவாடா என ஊர் சுற்றுவதிலேயே குறியாக இருப்பதால், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை தெரியாத இந்த அரசால் தமிழக மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in