LATEST NEWS
“யார் அந்த தமிழ் நடிகை?” விஜய்யின் துபாய் பயணம்… மாஜி சபாநாயகர் அப்பாவு கொளுத்திப் போட்ட விவகாரம்.. நெட்டிசன்கள் அதிரடி விவாதம்..!!
தமிழக முதலமைச்சர் விஜய் தமிழக வெற்றி கழகம் (தவெக) தொடங்குவதற்கு முன்பாக, ஒன்றிய பெண் அமைச்சர், ஆந்திர முதலமைச்சர் மற்றும் ஒரு தமிழ் நடிகை ஆகியோருடன் இணைந்து துபாயில் திமுக அரசுக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டியதாக திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தவெக கட்சியைத் தொடங்குவதற்காக பாஜகிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை விஜய் துபாயில் பெற்றுக் கொண்டதாக துபாய் வாழ் தமிழர்கள் கூறுவதை புறந்தள்ள முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்பாவு தனது பதிவில் குறிப்பிட்டுள்ள அந்த ‘தமிழ் நடிகை’ யார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தற்போது தீவிர விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி தொடங்குவதற்கு முந்தைய காலகட்டமான 2023-ஆம் ஆண்டின் இறுதியில், லியோ படத்தின் பணிகளில் விஜய் பிஸியாக இருந்ததாகவும், அப்போது அவர் துபாய் சென்றதற்கான எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் இல்லை என்றும் சுட்டிக்காட்டி இந்த விவாதங்கள் எழுந்துள்ளன.
மேலும், தற்போதைய மின்சாரக் கொள்முதல் குறித்தும் விமர்சித்துள்ள அப்பாவு, தமிழகத்தில் செயற்கையான மின்தட்டுப்பாட்டை உருவாக்கி, ஆந்திர நிறுவனத்திடம் இருந்து ஒரு யூனிட் 35 ரூபாய் வீதம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்காக முதலமைச்சர் விஜய்யை ‘ஆந்திரா ரெட்டி கேங்’ அந்த மாநிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதா என்றும், இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் கைமாறியுள்ளதா என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.
