CRIME
“உச்சகட்ட கொடூரம்.. சாதாரண கணுக்கால் முறிவு சிகிச்சை..” சில மணி நேரங்களில் 21 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. அம்பலமான மருத்துவமனையின் அலட்சியம்..!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் வரலாறு படித்து வந்த 21 வயது மாணவி டேல் ஆலிஸ் மார்ட்டின், சாதாரண கணுக்கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்த விசித்திரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 ஏப்ரல் 10 அன்று ஒரு பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தபோது மார்ட்டினுக்குக் கணுக்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் கனெக்டிகட்டில் உள்ள வாட்டர்பரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான ஒரு சிகிச்சையாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, சில மணி நேரங்களிலேயே அவரது மரணத்திற்கு வழிவகுத்ததால் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 14 மணி நேரத்திற்குள், வலியைக் கட்டுப்படுத்துவதற்காக ஆக்ஸிகோடோன், மார்பின் மற்றும் காபாபென்டின் உள்ளிட்ட மிக வீரியமான வலி நிவாரண மருந்துகள் மார்ட்டினுக்கு அதிக அளவில் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மருந்துகளின் கடுமையான தாக்கத்தால் மார்ட்டினின் சுவாசம் பாதிக்கப்பட்டு, அவர் கடுமையான மயக்க நிலைக்குச் சென்றுள்ளார். உடல்நிலை மிக மோசமடைந்த அந்த நேரத்தில் மருத்துவப் பணியாளர்கள் அவரை முறையாகக் கண்காணிக்கத் தவறியதால், அதிகாலை 7 மணியளவில் செவிலியர் சோதித்தபோது அவரது இதயம் ஏற்கனவே செயலிழந்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இறுதியில், மூளைச் செயல்பாடு பாதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 13 அன்று அவர் உயிர் காக்கும் கருவிகளிலிருந்து அகற்றப்பட்டு உயிரிழந்தார்.
இச்சம்பவம் நடந்தபோது இந்த மருத்துவமனை கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து திவாலான ‘புராஸ்பெக்ட் மெடிக்கல் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போதிய நிதியின்மை, பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் மருந்து நிர்வாகத் தவறுகளே தனது மகளின் மரணத்திற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டி, அவரது தந்தை லிண்ட்சே மார்ட்டின் வாட்டர்பரி நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார். மருத்துவமனையின் தற்போதைய புதிய நிர்வாகமான ஹார்ட்ஃபோர்ட் ஹெல்த்கேர் (அல்லது UConn Health), இந்தச் சம்பவம் தாங்கள் பொறுப்பேற்பதற்கு முன்பு நடந்தது என்பதால் எந்தக் கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டது.
