CRIME
“அடச்சீ.. பகலிலேயே நடந்த பயங்கரம்..” ரயில் நிலையத்தில் இளம்பெண்ணைத் தரையில் தள்ளி காம கொடூரன் செய்த வெறிச்செயல்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் சுரங்கப்பாதை இரயில் நிலையத்தில் 25 வயது இளம்பெண் ஒருவரைப் பகலில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஜோஸ் ரெய்ஸ் (31) என்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.லெக்சிங்டன் அவென்யூ – 63வது தெரு சுரங்கப்பாதை தளத்தில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் இந்த அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை இரயிலில் இருந்தே பின்தொடர்ந்து வந்த அந்த நபர், பிளாட்பாரத்தில் வைத்து அவரைத் தரையில் தள்ளி, முகத்தில் குத்திப் பலவந்தமாகப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிலர் உடனடியாகச் சத்தமிட்டு, தங்களது கைபேசிகளில் இந்த அத்துமீறலை வீடியோவாகப் பதிவு செய்யத் தொடங்கியதால், நிலைமை மோசமாவதைத் தடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சம்பவ இடத்தில் இருந்த ‘நல்ல சமாரியன்’ ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த வைரல் வீடியோ மற்றும் பொதுமக்கள் அளித்த தகவல்களின் உதவியுடன், நியூயார்க் நகர போலீசார் அடுத்த நாளே ஈஸ்ட் ஹார்லெம் பகுதியில் வசித்துவந்த குற்றவாளியை அதிரடியாகக் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அதிர்ஷ்டவசமாகப் பெரிய அளவிலான காயங்கள் ஏதுமின்றி லேசான காயங்களுடன் உயிர் தப்பியது பொதுமக்களின் துரித நடவடிக்கைக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
