“மரத்தில் கட்டி வைத்து, மிளகாய்ப் பொடி தூவி” கணவனை உலக்கையால் அடித்துக் கொடூரமாக கொன்ற 2-வது மனைவி.. திடுக்கிடும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“மரத்தில் கட்டி வைத்து, மிளகாய்ப் பொடி தூவி” கணவனை உலக்கையால் அடித்துக் கொடூரமாக கொன்ற 2-வது மனைவி.. திடுக்கிடும் பின்னணி..!!

Published

on

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை பகுதியில், சொத்துப் பங்கீடு தொடர்பான குடும்பத் தகராறில் கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த இரண்டாவது மனைவி போலீசில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் பகவான் என்றும், கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவர் அவரது இரண்டாவது மனைவி ராஜேஸ்வரி என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜேஸ்வரியின் முதல் கணவர் மூலம் கிடைத்த வீடு ஒன்று அவரது மூத்த மகளின் பெயரில் இருந்துள்ளது. ஆனால், அந்தச் சொத்தை ராஜேஸ்வரியின் மூன்று பிள்ளைகளுக்கும் சமமாகப் பிரித்துத் தர வேண்டும் என்று பகவான் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று பகவான் கத்தியைக் காட்டி ராஜேஸ்வரியை மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.

Advertisement

இதனால் கடும் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி, தற்காப்பிற்காக பகவானின் முகத்தில் மிளகாய்ப் பொடியைத் தூவி, அவரை அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து உலக்கையால் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளார். பலத்த காயமடைந்த பகவான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, ராஜேஸ்வரி நேராக உள்ளூர் காவல் நிலையத்திற்குச் சென்று போலீசாரிடம் சரணடைந்தார்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in