LATEST NEWS
CM சார்..! இந்த வருஷம் 5 கேக் வெட்டுனீங்க.. அடுத்த பிறந்தநாளுக்கு 3 தான் வெட்ட முடியும்… உடனே இதை பண்ணுங்க… திமுக பரந்தாமனால் விஜய் – த்ரிஷாவின் பழைய போட்டோ மீண்டும் பயங்கர வைரல்..!!
தமிழ்நாட்டில் தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்து, தவெக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ. பரந்தாமன் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த நேர்காணலில், தமிழக வெற்றிக் கழகத்தினருக்குப் புரியும் வகையில் பணவீக்கத்தை விளக்க ஒரு சுவாரசியமான உதாரணத்தைக் கையாண்டார். அதுவே தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அவரது பேட்டியில், தவெக தலைவர்களுக்குப் புரியும்படி கூற வேண்டும் என்றால், “இந்த வருடம் பிறந்தநாளுக்கு 5 கேக் வெட்டிய முதலமைச்சர் விஜய், அடுத்த வருடம் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக அதே விலைக்கு 3 கேக்குகள் மட்டும்தான் வெட்ட முடியும்” என்று சுட்டிக்காட்டியிருந்தார். பரந்தாமனின் இந்த நக்கல் கலந்த அரசியல் விளக்கம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இதன் விளைவாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளின் போது நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த, இருவரும் இணைந்து கேக் வெட்டும் வைரல் புகைப்படம் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களில் (SM) நெட்டிசன்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. பணவீக்கத்தை தவெக-வினர் இப்போது தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பார்கள் என்ற ரீதியில் இந்த மீம்களும் பதிவுகளும் பகிரப்பட்டு வருகின்றன
