உஷார்..! சமூக வலைத்தளத்தில் அட்ரஸ் கொடுத்தால் இதுதான் கதி… வீட்டை விட்டு வெளியேறிய இன்ஸ்டா பிரபலம்… சம்பவத்தை சுட்டிக்காட்டி கேரள போலீசார் விழிப்புணர்வு பதிவு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உஷார்..! சமூக வலைத்தளத்தில் அட்ரஸ் கொடுத்தால் இதுதான் கதி… வீட்டை விட்டு வெளியேறிய இன்ஸ்டா பிரபலம்… சம்பவத்தை சுட்டிக்காட்டி கேரள போலீசார் விழிப்புணர்வு பதிவு..!!

Published

on

மதுரையை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் வீரமணி, தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடர்வோரிடம் ‘ஸ்வீட் பாக்ஸ்’ வாங்கி அனுப்புமாறு கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்தவர்களுக்கு, தனது வீட்டு முகவரியை வீரமணி பகிர்ந்துள்ளார். அவர் அனுப்பிய அந்த முகவரியைப் பார்த்த குறும்புக்கார நெட்டிசன்கள், அவருக்கு பிரபல ஆன்லைன் வர்த்தக தளங்களில் ‘கேஷ் ஆன் டெலிவரி’ முறையில் பல பொருட்களை ஆர்டர் செய்து அவரது முகவரிக்கு அனுப்பி உள்ளனர். ஒருவர் ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான தொலைக்காட்சியையும், இன்னொருவர் ஒருபடி மேலே போய் ஜே.சி.பி. எந்திரத்தையும் ஆர்டர் செய்திருந்தனர். மற்றொருவர் ரூ.70 கோடி மதிப்பிலான ராணுவ பீரங்கி வரை ஆர்டர் செய்துள்ளதாக ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார். ஆரம்பத்தில் நெட்டிசன்களின் தொந்தரவுகளைச் சமாளித்த அவர், நிலைமை கைமீறிப் போனதால் கடுமையான அழுத்தத்திற்கு ஆளானார். தொடர்ச்சியாக டெலிவரி பொருட்கள் வந்துகொண்டிருந்ததால், வீட்டை விட்டு வெளியேறுவதாகக் கூறி கையில் பெரிய பைகளுடன் அவர் செல்வது போன்ற வீடியோவையும் வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டி கேரள போலீசார் விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். கமெண்ட் பாக்ஸ் மற்றும் லைவ் வீடியோக்களில் தனிநபர் குறித்த தகவல்களைப் பகிர்வதும், அது எத்தகைய ஆபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதும் குறித்து எச்சரித்துள்ளனர். மேலும், தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதில் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள போலீசார் அந்த பதிவில் வலியுறுத்தியுள்ளனர்.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in