“கேள்வி கேட்டது தப்பா..?” போராட்டத்தில் மாணவியின் காதைப் பிளந்த காவல்துறை..! ராகுல் காந்தி முன்னிலையில் கதறிய மாணவி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கேள்வி கேட்டது தப்பா..?” போராட்டத்தில் மாணவியின் காதைப் பிளந்த காவல்துறை..! ராகுல் காந்தி முன்னிலையில் கதறிய மாணவி..!!

Published

on

இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இப்போராட்டங்களின் போது இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மாணவர்களை டெல்லி காவல்துறை கொடூரமாகத் தாக்கியதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கைது நடவடிக்கையின் போது போராட்டக்காரர்கள் தடியால் தாக்கப்பட்டதாகவும், அவர்களின் அந்தரங்க உறுப்புகளில் உதைக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர், இத்தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த டெல்லி பல்கலைக்கழக மாணவி அதிரா தனது ஒரு காதில் கேட்கும் திறனை இழந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி அதிராவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “கேரளாவைச் சேர்ந்த அதிரா தனது ஒரு காதில் கேட்கும் திறனை இழந்துள்ளார். காதில் பலமாக அடிபட்டதால் அவருக்கு இனி ஒரு காது கேட்காது. கடந்த முறை நான் உங்களுக்கு பெல்லட் துப்பாக்கித் தாக்குதலில் பார்வையை இழந்த ஒரு இளைஞனைக் காட்டினேன்; இப்போது காவல்துறையின் தடியடியால் ஒரு காதில் கேட்கும் திறனை இழந்துள்ள இந்த மாணவியை உங்கள் முன் நிறுத்துகிறேன்” என்று மிகுந்த ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

Advertisement

போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டபோது பேருந்தில் பெண் காவலர்கள் யாரும் இல்லாதது குறித்துத் தான் கேள்வி எழுப்பியதால், டெல்லி காவல்துறையினர் தன் கன்னத்தில் பலமுறை கொடூரமாக அறைந்ததாக மாணவி அதிரா கூறியுள்ளார். இந்தத் தாக்குதலால் தன் கண்ணில் காயமும், காதில் நிரந்தரப் பாதிப்பும் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து இந்திய தேசிய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் மாணவியும், காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது டெல்லி காவல்துறை வன்முறையில் ஈடுபட்டதாகத் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in