“அவங்கதான் என் சாவுக்கு காரணம்…” தற்கொலை கடிதத்தில் இருக்கும் அந்த 5 பெயர்கள் யார்..? ஐடி பெண் இன்ஜினியருக்கு நேர்ந்த கொடுமை.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அவங்கதான் என் சாவுக்கு காரணம்…” தற்கொலை கடிதத்தில் இருக்கும் அந்த 5 பெயர்கள் யார்..? ஐடி பெண் இன்ஜினியருக்கு நேர்ந்த கொடுமை.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கணவர் மற்றும் மாமனார் குடும்பத்தினரின் தொடர் கொடுமை மற்றும் வரதட்சணை தொல்லை காரணமாக 33 வயது ஐடி பெண் பொறியாளர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. புனேயின் கேசவ் நகர் பகுதியைச் சேர்ந்த த்ரிஷ்ணா ராகுல் சாக்பால் என்ற பெண், கடந்த செப்டம்பர் 29 அன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். த்ரிஷ்ணா எழுதிய தற்கொலை கடிதத்தில், தனது மரணத்திற்குத் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தான் காரணம் எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் 74 வயது தந்தை பால்கிருஷ்ணா நிகாம் அளித்த புகாரின் பேரில், முந்த்வா காவல்துறையினர் த்ரிஷ்ணாவின் கணவர் ராகுல் சஞ்சய் சாக்பால் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ள புகாரின்படி, த்ரிஷ்ணாவுக்கும் ராகுலுக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது த்ரிஷ்ணாவின் குடும்பத்தினர் 13 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக வழங்கியுள்ளனர். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த த்ரிஷ்ணாவிடம், அவரது முழுச் சம்பளத்தையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவரது பெற்றோருக்குச் சொந்தமான வீட்டை மாமியாரின் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என்றும் கணவர் குடும்பத்தினர் வற்புறுத்தி சித்திரவதை செய்துள்ளனர். மேலும், த்ரிஷ்ணாவின் பெயரில் 1 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய பிளாட் வாங்க வேண்டும் என்றும் அவரது மாமனார் கட்டாயப்படுத்தியுள்ளார். இந்தத் தொடர் உடல் மற்றும் மன ரீதியான தாக்குதல்கள் காரணமாக, தம்பதியினர் 2021 முதல் கேசவ் நகரில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

Advertisement

தனியாக வசித்த போதிலும் கணவர் குடும்பத்தாரின் மிரட்டல்களும் கொடுமைகளும் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் த்ரிஷ்ணாவை அவரது கணவர் அடித்து வீட்டை விட்டு துரத்தியதால், அவர் தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அதன் பின்னர் ராகுல் நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவும் தாக்கல் செய்துள்ளார். இந்தத் தொடர் மன உளைச்சலுக்கு ஆளான த்ரிஷ்ணா, செப்டம்பர் 29 அன்று காலை 11:30 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திலிருந்து தற்கொலை கடிதத்தைக் கைப்பற்றிய முந்த்வா காவல்துறையினர், இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in