LATEST NEWS
ச்சீ இவ மனுஷியா..? கள்ளக்காதலனுக்காக பெற்ற மகளையே பகடைக்காயாக்கி… மனைவி சொன்ன அந்த ஒரு பொய்… சிறையில் அடைக்கப்பட்ட கணவன்…!!!
அசாம் மாநிலத்தில் நடந்துள்ள நெஞ்சை உலுக்கும் இந்தச் சம்பவம், கேட்பவர் எவருக்கும் ஒரு நிமிடம் நடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அங்கு வசித்து வந்த ஒரு தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கணவருக்கு அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது; அதே நேரத்தில், அவரது மனைவி மற்றொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகளும், 9 வயதில் மற்றொரு மகளும் என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்தத் தொடர் குடும்பச் சண்டைகள் காரணமாக, அவதிக்குள்ளான தம்பதியினர் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். விவாகரத்துக்குப் பிறகு, மூத்த மகள் தாயுடனும், இளைய மகள் தந்தையுடனும் வாழத் தொடங்கினர். இவர்களது வீடுகள் சுமார் 5 கிலோமீட்டர் தூர இடைவெளியில் அமைந்திருந்தன. பிரிந்து வாழ்ந்த போதிலும், இந்த இரண்டு பெண் குழந்தைகளும் அவ்வப்போது தங்களுக்குள் சந்தித்துக் கொள்வதற்கும், தங்களின் பெற்றோரைக் காண்பதற்கும் இரு வீடுகளுக்கும் சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு நாள் தனது முன்னாள் கணவரைப் பழிவாங்கவும், அவரைப் பொறிவைத்துப் பிடிக்கவும் எண்ணிய அந்தப் பெண், தனது சொந்த இளைய மகளையே பகடைக்காயாகப் பயன்படுத்தியுள்ளார். அவர் தனது முன்னாள் கணவர் மீது, இளைய மகளை வன்புணர்வு மற்றும் கொடூரத் தாக்குதல் செய்ததாகக் காவல்துறையில் பொய்ப் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்தத் திடுக்கிடும் வழக்கின் அடிப்படையில், அந்த அப்பாவித் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சுமார் 6 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க நேரிட்டுள்ளது.
