LATEST NEWS
“நாட்டை ஏன் நாசமாக்குறீங்க…?” அபிஜீத் தீப்கேவுக்கு எதிராக ஒலித்த கண்டனக் குரல்..! ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு..!!
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜீத் தீப்கே, நாக்பூரிலிருந்து விமானம் மூலம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அப்போது விமான நிலைய வளாகத்தை விட்டு அவர் வெளியேறியபோது, அங்கிருந்த பொதுமக்கள் சிலர் அவருக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பினர். அதில் ஒருவர், “நாட்டை ஏன் நாசமாக்குறீங்க?” என்று அவரைப் பார்த்து உரத்த குரலில் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளின் சூழலில் நடந்து சென்ற அபிஜீத் தீப்கேவை சூழ்ந்துகொண்ட அந்த கும்பல், அவருக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியதுடன், அவர் ஒரு திருடன் என்றும் கூச்சலிட்டது. எனினும், இந்த எதிர்ப்புகளுக்கு நேரடி வார்த்தை மோதலில் ஈடுபடாத தீப்கே, அவர்களைப் பார்த்து தனது கட்டை விரலை உயர்த்திக் காட்டி அமைதியாகத் தனது காரை நோக்கிச் சென்று அங்கிருந்து புறப்பட்டார்.
முன்னதாக, தனது பாட்டியின் மறைவையொட்டி சொந்த ஊரான நாக்பூருக்குச் சென்று திரும்பிய தீப்கே, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் டெல்லிக்கு வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பும் டெல்லி வந்தபோது விமானத்திலேயே தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அவர், தற்போது மீண்டும் பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
