“இந்தத் தெரு, அந்தத் தெரு, மற்றொரு தெரு…!” பெயரிட வழி தெரியாமல் அதிகாரிகள் செய்த விசித்திர வேலை! குழம்பிப் போய் நிற்கும் மக்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இந்தத் தெரு, அந்தத் தெரு, மற்றொரு தெரு…!” பெயரிட வழி தெரியாமல் அதிகாரிகள் செய்த விசித்திர வேலை! குழம்பிப் போய் நிற்கும் மக்கள்..!!

Published

on

கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள போர்ட்ட்டர்ஸ் லேக் பகுதியில் அமைந்துள்ள சில தெருக்களின் பெயர்கள் இணையத்தில் தற்போது பெரிதும் பேசப்பட்டு வருகின்றன. பொதுவாக புதிய குடியிருப்புப் பகுதிகளை உருவாக்கும் போது அவற்றுக்கு அழகிய பெயர்களை சூட்டுவது வழக்கம். ஆனால், இப்பகுதியில் புதிய குடியிருப்புப் பகுதியை உருவாக்கியவர்கள் தெருக்களுக்குப் பெயரிட யோசனை இல்லாமல், சாதாரணமாகப் பேசும் வார்த்தைகளையே பெயர்களாக சூட்டியுள்ளனர்.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள மூன்று தெருக்களுக்கு முறையே ‘இந்தத் தெரு’ (‘திஸ் ஸ்ட்ரீட்’), ‘அந்தத் தெரு’ (‘தட் ஸ்ட்ரீட்’), மற்றும் ‘மற்றொரு தெரு’ (‘தி அதர் ஸ்ட்ரீட்’)என்று விசித்திரமாகப் பெயரிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த பெயர்கள் ஒரு கேலிக்காகவே உருவாக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், உள்ளூர் அரசாங்கம் அவற்றை அதிகாரப்பூர்வமாக ஏற்று அங்கீகரித்துள்ளது.

Advertisement

இதனால் அந்தப் பகுதிக்குச் செல்லும் புதியவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்களது முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் பெரும் குழப்பமடைகின்றனர். குறிப்பாக, “நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?” என்று கேட்டால், “நான் இந்தத் தெருவில் இருக்கிறேன்” என்று பதிலளிப்பதும், வழிகாட்டும் பலகைகளைப் பார்க்கும் மக்கள் குழப்பம் அடைவதும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in