மக்களே உஷார்..! 23-ல் ஒன்று.. 26-ல் ஒன்று..! ஒரே வாரத்தில் அடுத்தடுத்து உருவாகும் புதிய தாழ்வு பகுதிகள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மக்களே உஷார்..! 23-ல் ஒன்று.. 26-ல் ஒன்று..! ஒரே வாரத்தில் அடுத்தடுத்து உருவாகும் புதிய தாழ்வு பகுதிகள்..!!

Published

on

இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, வரும் அக்டோபர் 23-ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலிலும், அதனைத் தொடர்ந்து அக்டோபர் 26-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலிலும் இந்த புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாக உள்ளதால், கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் வானிலை மாற்றங்கள் குறித்து இந்திய வானிலை மையம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in