LATEST NEWS
“உனக்கான நேரம் வரும், அதுவரை…” வெ.இண்டிஸ் தொடரில் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு தராதது ஏன்..? கேப்டன் ஷ்ரேயாஸ் ஓபன் டாக்..!!
இந்திய டி20 அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காதது குறித்து முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அணியில் இடம் கிடைக்கவில்லை என்று கவலைப்படாமல், ஆட்டத்திற்கான முறையான பயிற்சியில் மட்டும் தொடர்ந்து முழு கவனம் செலுத்துமாறு சூர்யவன்ஷியிடம் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ஷ்ரேயாஸ், பயிற்சியில் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு இருக்கும்போது அவருக்கான வாய்ப்புகள் நிச்சயமாகத் தேடி வரும் என்றும், அதுவரை சில நேரங்களில் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கி வரும் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவரும் மிகச் சிறப்பான ஃபார்மில் விளையாடி வருவதாலேயே, சூர்யவன்ஷியால் ஆடும் லெவனில் இடம் பிடிக்க முடியவில்லை என்ற எதார்த்தமான சூழலையும் அவர் பகிர்ந்துள்ளார்
