CRIME
“தற்கொலையா? கொலையா..?” அடுத்தடுத்த மரங்களில் தொங்கிய காதலர்கள்.. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் திங்கட்கிழமை அதிகாலை வேளையில் அடுத்தடுத்து இரண்டு சடலங்கள் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. படுவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேச்சா பூர்வா கிராமத்திற்கு அருகில், சாலையோரம் இருந்த இரு வேறு மரங்களில் ஓர் இளைஞர் மற்றும் இளம் பெண்ணின் சடலங்கள் தனித்தனியாகத் தூக்கில் தொங்கியவாறு கண்டெடுக்கப்பட்டன. இந்தத் துயரச் சம்பவத்தில் பலியானவர்கள் பசாசா கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரின் மகன் ஜிதேந்திரா (18) மற்றும் பேச்சா பூர்வா கிராமத்தைச் சேர்ந்த ராம்கிலாவனின் மகள் ரமா (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
https://twitter.com/zameerahmad_up/status/2112058422904734177?s=20
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மாவட்டத் தலைமையகத்திற்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், லக்னோவில் தொழிலாளியாக வேலை செய்து வந்த ஜிதேந்திராவிற்கும், 15 மாதங்களுக்கு முன்பு ததுரி கிராமத்தைச் சேர்ந்த பாலஜீத் என்பவருடன் திருமணமான ரமாவிற்கும் இடையே ஏற்கனவே பழக்கம் இருந்ததும், அவர்கள் இருவரும் காதல் உறவில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த மரணங்கள் தற்கொலையா அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
