LATEST NEWS
தமிழ்நாடே ஷாக்..! “போதைப்பொருள் விற்பனைப் பணம்தான் தவெகவுக்கு கைமாறியிருக்கு” திமுக பரந்தாமன் போட்ட குண்டு.. பற்றி எரியும் அரசியல்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் நிதி ஆதாரங்கள் மீது வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பரந்தாமன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற 2 தொகுதி இடைத்தேர்தலுக்கு, பூபாலன் என்பவரின் ‘மெத்’ போதைப்பொருள் விற்பனைப் பணம்தான் கைமாறியுள்ளது என்று அவர் நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார். தவெக போன்ற கட்சிகளுக்கு இது போன்ற போதைப்பொருள் குற்றவாளிகளிடம் இருந்துதான் பெருமளவில் பணம் வந்து சேருகிறது என்றும் அவர் தனது குற்றச்சாட்டில் அழுத்தமாகக் கூறியுள்ளார்.
மேலும், இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு சில அடுக்கடுக்கான கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார். இதில் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்குப் பங்கு இருக்கிறதா? இல்லையா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், கில்லி சரத்துக்கு அவரது சொந்தக் கட்சிக்காரர்களே போதைப்பொருளை சப்ளை செய்கிறார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த அதிரடியான குற்றச்சாட்டுகள் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
