“CM விஜய்யை காணவில்லை” அடுத்தடுத்து அரங்கேறும் கொடூர குற்றங்களால் அதிரும் தமிழகம்.. X தளத்தில் டிரெண்ட் செய்யும் TN பாஜக.!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“CM விஜய்யை காணவில்லை” அடுத்தடுத்து அரங்கேறும் கொடூர குற்றங்களால் அதிரும் தமிழகம்.. X தளத்தில் டிரெண்ட் செய்யும் TN பாஜக.!!

Published

on

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகக் குற்றம் சாட்டி, “முதலமைச்சர் விஜய்யைக் காணவில்லை” என்ற ஹேஷ்டேக்கை தமிழக பாரதிய ஜனதா கட்சி தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தீவிரமாக டிரெண்ட் செய்து வருகிறது. தமிழகத்தில் அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களும், மர்மமான முறையில் மக்கள் காணாமல் போகும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள பாஜவினர், இதனைத் தடுக்க வேண்டிய அரசும், காவல் துறையைத் தன் வசம் வைத்துள்ள முதலமைச்சரும் மௌனம் காப்பதாகக் கடுமையாக விமரிசித்துள்ளனர்.

இவ்விவகாரத்தில் அண்மையில் நடைபெற்ற இரு முக்கியக் குற்றச்சம்பவங்களை பாஜவினர் முதன்மையாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கடந்த அக்டோபர் 14 அன்று மர்மமான முறையில் காணாமல் போன 26 வயதுடைய உத்திரா என்ற தனியார் மருத்துவமனை நர்ஸ், ஐந்து நாட்களுக்குப் பிறகு ஈரோடு பெருந்துறை அருகே சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கொடூர சம்பவத்தை அதில் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல், அக்டோபர் 11 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு வீட்டில் பெற்றோருடன் தூங்கிய, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமாவதி, நள்ளிரவில் திடீரென காணாமல் போய் பல நாட்களாகியும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத விவகாரத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement

இத்தகைய அடுத்தடுத்த சம்பவங்களால் தமிழக மக்களிடையே, குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாக பாஜவினர் குற்றம் சாட்டியுள்ளனர். குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் தவறிய காவல் துறையையும், அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யையும் சாடியுள்ள அவர்கள், அரசு விளம்பர மேலாண்மையிலும், அரசியல் பிரச்சாரங்களிலும் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக முடங்கியுள்ளதாகவும் தங்களது சமூக வலைத்தளப் பதிவுகள் மூலம் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in