LATEST NEWS
“மணிக்கு ஒருமுறை CM-கிட்ட இருந்து கால் வருது.. மழைநீரை வெளியேற்ற முதல்வர் போட்ட ரகசிய ஆர்டர்… அமைச்சர் N.ஆனந்த் பகிர்ந்த அதிரடித் தகவல்..!!
மழைக்கால நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் N.ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு தற்போதைய நிலை குறித்து கேட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், பொறுப்பு அமைச்சர்கள் அனைவரும் தங்களுக்குரிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் மழைக்காலங்களில் 4 முதல் 5 நாட்கள் வரை மழைநீர் தேங்கி நின்ற நிலை மாறி, தற்போது முன்னெச்சரிக்கை மற்றும் துரித நடவடிக்கைகள் காரணமாக 4 முதல் 5 மணி நேரங்களிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
