“விஜய் ஒன்றும் நாட்டின் மன்னர் அல்ல… வெளிப்படைத்தன்மை எங்கே..? ஆந்திரப் பயணம் குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சரமாரி கேள்வி..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“விஜய் ஒன்றும் நாட்டின் மன்னர் அல்ல… வெளிப்படைத்தன்மை எங்கே..? ஆந்திரப் பயணம் குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சரமாரி கேள்வி..!!”

Published

on

கிருஷ்ணா நீர் பங்கீடு மற்றும் கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதலமைச்சர் விஜய் சந்தித்துப் பேசியதாகத் தமிழக அரசின் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலைமையில், முதலமைச்சர் விஜய்யின் ஆந்திரப் பயணத்தில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லை என்றும், அரசு முறைப் பயணங்களின் போது பின்பற்றப்படும் மரபுகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நதிநீர் தொடர்பான முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெறும் போது, அதற்கான நீர்வளத்துறைச் செயலாளர் உடன் செல்லாமல் விஷ்ணு ரெட்டி என்ற ஆலோசகர் உடன் சென்றது குறித்து துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். நீர்வளத்துறைச் செயலாளரை விட அங்கே ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கு என்ன வேலை இருக்கிறது என்றும், அரசில் அவரது பங்கு மற்றும் பொறுப்பு என்ன என்பதையும் மக்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

மேலும், முதலமைச்சர் விஜய் நினைத்ததை எல்லாம் செய்வதற்கு நாட்டின் மன்னரோ அல்லது இளவரசரோ அல்ல என்றும், மக்கள் வாக்களித்துத் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாக்களித்த மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியது தார்மீகக் கடமை என்றும், கேள்விகளை மிரட்டல்களால் அடக்க முடியாது என்றும் துரைமுருகன் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in