“என்னால முடியல சார்..” 4 மனைவிகள்.. 58 குழந்தைகள்.. உலகையே உலுக்கிய ஆப்கானிஸ்தான் தந்தையின் கண்ணீர் வாக்குமூலம்.. நெஞ்சை பதறவைக்கும் அவல நிலை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னால முடியல சார்..” 4 மனைவிகள்.. 58 குழந்தைகள்.. உலகையே உலுக்கிய ஆப்கானிஸ்தான் தந்தையின் கண்ணீர் வாக்குமூலம்.. நெஞ்சை பதறவைக்கும் அவல நிலை..!!

Published

on

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமது சதக் என்ற நபர், தனக்கு 4 மனைவிகள் மற்றும் 58 குழந்தைகள் உள்ள நிலையில், ஒட்டுமொத்த குடும்பமும் கடுமையான வறுமையில் சிக்கித் தவிப்பதாகக் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார். போதிய வருமானம் இல்லாததால் தனது இமாலயக் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் திணறி வரும் அவர், “நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் வறுமை முன்கூட்டியே தெரிந்திருந்தால், நான் இத்தனை குழந்தைகளைப் பெற்றிருக்கவே மாட்டேன்” என்று ஊடகங்களிடம் பகிரங்கமாகப் புலம்பியுள்ளார்.

வளரும் தனது குழந்தைகளில் பலர் போதிய உணவின்றி இரவு நேரங்களில் பசியோடு உறங்கச் செல்வதாகவும், அவர்களுக்குப் போடுவதற்கு ஒரு ஜோடி செருப்பு கூட வாங்கித் தர இயலாத அவல நிலையில் தான் உள்ளதாகவும் அவர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். இத்தனை பெரிய குடும்பத்திற்கு அடிப்படைத் தேவைகளான உணவு, உடை மற்றும் மருத்துவ வசதிகளைக் கூடச் செய்து தர முடியாமல் தவிக்கும் இந்த ஆப்கானியத் தந்தையின் புலம்பல், அந்நாட்டில் நிலவி வரும் கடுமையான வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடியை உலகிற்குப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in