CRIME
“அவன் என்னை விடமாட்டான்..” தூங்கிய 28 வயது கணவனுக்கு நேர்ந்த விபரீதம்.. கள்ளக்காதலனுக்காக மனைவி போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில், சாலையோரம் கிடந்த ஒரு பெட்டிக்குள் 28 வயதான சோனு என்ற வாலிபர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சோனுவை அவரது மனைவி நேகா தனது கள்ளக்காதலன் ஜிதேந்திராவுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. 23 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகதீஷ் என்பவரைத் திருமணம் செய்த நேகா, 7 ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பிரிந்து, தன்னை விட வயது குறைந்த சோனுவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், நேகாவுக்கு ஜிதேந்திரா என்ற மற்றொரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. முந்தைய கணவரைப் போல சோனு தன்னை எளிதாக விட்டுவிட மாட்டார் என்பதை உணர்ந்த நேகா, சோனு தூங்கிக்கொண்டிருந்தபோது ஆட்டுக்கல்லால் தாக்கியும், முகத்தில் போர்வையைப் போர்த்தி மூச்சுத்திணறடித்தும் கொன்றுள்ளார்.
கொலைக்குப் பிறகு, சோனுவின் உடலை ஒரு பெரிய பெட்டிக்குள் அடைத்த நேகா, ரூ.1,200 வாடகைக்கு ஒரு சரக்கு வாகனத்தை முன்பதிவு செய்துள்ளார். யாரும் சந்தேகப்படாதவாறு அந்தப் பெட்டியை வாகனத்தில் ஏற்றிச் சென்று சாலையோரத்தில் வீசியுள்ளார். சோனுவின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய உன்னாவ் காவல்துறையினர், கொலையாளிகளான நேகா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஜிதேந்திரா ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
