CRIME
அடச்சீ… 9 வயது சிறுமியை லிஃப்டில் பின்தொடர்ந்த 38 வயது மிருகம்.. 9-வது மாடியில் நடந்த கொடூரம்… கடைசியில் நேர்ந்த ட்விஸ்ட்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
ஷ்யாவில் 38 வயதுடைய ஆண்ட்ரே என்ற நபர், குடியிருப்பு வளாகம் ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு தனியாகச் சென்ற 9 வயது சிறுமியைத் தீய நோக்கத்துடன் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அச்சிறுமி அங்கிருந்த மின்தூக்கியில் ஏறியபோது, அந்த நபரும் பின்னாடியே ஏறியுள்ளார். மின்தூக்கி ஒன்பதாவது மாடியை அடைந்ததும், அந்த நபர் சிறுமியை வலுக்கட்டாயமாகப் பிடித்து வெளியே இழுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி பயத்தில் சத்தமாகக் கூச்சலிடவே, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டில் இருந்த பெண் ஒருவர் உடனடியாக வெளியே வந்துள்ளார். அண்டை வீட்டுப் பெண்மணி தங்களைக் கண்டதும் பயந்துபோன அந்த நபர், சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து உடனடியாகத் தப்பியோடியுள்ளார். ஆனால், அந்த மர்ம நபர் அதே குடியிருப்பில் வசிப்பவர் என்பதால், வெளியே வந்த அண்டை வீட்டுப் பெண்மணி அவரை எளிதாக அடையாளம் கண்டு போலீசாரிடம் காட்டிக் கொடுத்துள்ளார்.
போலீசாரால் கைது செய்யப்பட்ட அந்த நபர், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர், தான் அதே கட்டிடத்தில் வசிப்பதால் தனக்குக் சிறைத்தண்டனைக்கு பதிலாக ‘வீட்டுக்காவல்’ என்ற குறைவான தண்டைனையை வழங்குமாறு நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், நீதிபதி அவரது கோரிக்கையை நிராகரித்து, அவரை உடனடியாகச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த நபர் அதே கட்டிடத்தில் வீட்டுக்காவலில் இருந்தால், அது பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் மனநிலையைப் பெரிய அளவில் பாதிக்கும் என்ற உன்னதமான நோக்கில் நீதிபதி இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளார். சிறுமிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்த நீதிமன்றத்தின் இந்தச் சிறந்த தீர்ப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
