CRIME
“எனக்கு நீதி கிடைக்காது… ஏழையா பிறந்தது குற்றமா..?” வாடிக்கையாளர் அறைந்த அவமானத்தால் தற்கொலை செய்துகொண்ட டெலிவரி ஊழியர்..! கதற வைக்கும் சோகம்..!!
டெல்லி கிழக்கு பகுதியில் உள்ள வினோத் நகரில் பிளிப்கார்ட் மினிட்ஸ் டெலிவரி ஊழியராகப் பணிபுரிந்து வந்த சமீரின் உசேன் (24), கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி இரவு சுமார் 10:30 மணியளவில் ராம்பால் சிங் என்ற வாடிக்கையாளரிடம் சுமார் 150 ரூபாய் மதிப்புள்ள காபி ஆர்டரை டெலிவரி செய்யச் சென்றார். அந்த ஆர்டருக்கான பணத்தை வாடிக்கையாளர் வழங்கியபோது, அதில் இருந்த 10 ரூபாய் நோட்டு கிழிந்திருந்ததால், அதை மாற்றிக் கொடுக்குமாறு சமீரின் உசேன் மரியாதையுடன் கேட்டுள்ளார். ஆனால், வாடிக்கையாளர் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதுடன், தன்மீது கைப்பேசியில் பணம் கொடுக்க தாமதமானதைக் காரணம் காட்டி அவரை மூன்று முறை அறைந்ததாகவும் அவர் தனது இறுதி வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது ஏழ்மை நிலையைக் சுட்டிக் காட்டி நடுரோட்டில் சுயமரியாதைக்கு அவமானம் இழைக்கப்பட்டதால் மனம் உடைந்த சமீரின் உசேன், தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறி வீடியோக்களைப் பதிவு செய்தார். சைக்கிளிலேயே சென்று கடினமாக உழைத்து வாழும் தான், ஏழையாக இருப்பதாலேயே எங்கு வேண்டுமானாலும் அவமானப்படுத்தப்படுவதாகவும், தனக்கு நீதி கிடைக்காது என்று அஞ்சி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகவும் அதில் தெரிவித்தார். இந்தச் சம்பவம் நடந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு அக்டோபர் 5-ஆம் தேதி விஷம் அருந்திய அவர், லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அக்டோபர் 20-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த சமீரின் உசேனின் தாயார் கலிமா, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அரசியல் தொடர்புகள் உள்ளதாகவும், தனது மகனின் ஏழ்மையை அவர்கள் கேலி செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் பாரதிய நியாய சந்கிதா பிரிவின் கீழ் தற்கொலைக்குத் தூண்டியதாகப் புதிய பிரிவைச் சேர்த்து, இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
