LATEST NEWS
ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜி.. விலகியதாகச் சொன்னவர் திடீர் என்ட்ரி..! உச்சக்கட்ட பரபரப்பில் திருச்சி கிழக்கு..!!
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் குறித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த முக்கியத்துவமிக்க ஆலோசனைக் கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் K.N. நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நேரடியாகக் கலந்து கொண்டுள்ளனர்.
சிறப்பாக, திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் அவர்களே நேரடியாகப் போட்டியிடவுள்ளதாகப் பரவலாகக் கூறப்படும் சூழலில், இந்த ஆலோசனை கூட்டம் பெரும் அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. அதேவேளையில், கடந்த சில நாட்களாகக் கட்சிப் பணிகளிலிருந்து விலகி ஒதுங்கியிருந்ததாகக் கூறப்பட்ட V.S. பாலாஜியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
