LATEST NEWS
“டிசம்பர் 15 முதல் பேரதிர்ச்சி..!” இந்த வேலை செய்தால் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்படும் குடிநீர் விநியோகம்.. அரசு வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை..!!
ஹைதராபாத்தில் வரும் டிசம்பர் 15 முதல் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஹைதராபாத் மாநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் எச்சரித்துள்ளது. நகரின் முக்கிய நீர் ஆதாரங்களான சிங்கூர் மற்றும் மஞ்சீரா நீர்த்தேக்கங்கள் தங்களின் டெட் ஸ்டோரேஜ் எனப்படும் மிகக்குறைந்த நீர்மட்ட அளவை எட்டியுள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும். இதனால் பொதுமக்கள் அனைவரும் குடிநீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நீர் நெருக்கடியைச் சமாளிக்க கடுமையான கட்டுப்பாடுகளையும் வாரியம் விதித்துள்ளது. வீடுகளின் முன்பு தண்ணீரை ஊற்றி வீணடித்தாலோ அல்லது குடிநீரைக் கொண்டு கார்களைக் கழுவினாலோ வழங்கப்படும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, கடுமையான அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீரை வீணாக்குவதைத் தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்படுமாறு அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
