நள்ளிரவு பயங்கரம்.. சாலையில் நடந்து சென்ற 3 பேர் மீது அசுர வேகத்தில் பாய்ந்த கார்.. நொடியில் முடிந்த வாழ்க்கை.. திக் திக் சிசிடிவி..!!! – cinefeeds
Connect with us

CRIME

நள்ளிரவு பயங்கரம்.. சாலையில் நடந்து சென்ற 3 பேர் மீது அசுர வேகத்தில் பாய்ந்த கார்.. நொடியில் முடிந்த வாழ்க்கை.. திக் திக் சிசிடிவி..!!!

Published

on

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நார்கெட்டபள்ளியில் தாடிகல் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூன்று பேர் மீது கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக மோதியதில் கொடூரமான சாலை விபத்து நேரிட்டுள்ளது. இந்த பயங்கர விபத்தின் தாக்கத்தால், காரின் அடியில் சிக்கியவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்துக்குள்ளான காரைப் பறிமுதல் செய்து, தப்பியோடிய கார் ஓட்டுநரைத் தேடி வருவதோடு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in