LATEST NEWS
தலைவரே..! “அன்னைக்கே கரூர்லயே அவனைப் போட்ருந்தா…” அன்பில் மகேஸ் கைதின்போது கொலை மிரட்டல் விடுத்த திமுக தொண்டர் – தமிழகத்தையே உலுக்கிய அதிர்ச்சி வீடியோ..!!
முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதில் சுமார் ₹100 கோடி ஊழல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை நிராகரித்த சில மணி நேரங்களிலேயே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட அன்பில் மகேஸை போலீசார் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றபோது, வெளியே திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் சிலர் ஆவேசமாக முழக்கமிட்டனர். அப்போது ஒரு தொண்டர், “தலைவரே.. அன்னைக்கே அவனை கரூர்ல போட்ருந்தா இன்னைக்கு இந்த நிலைமை வந்திருக்குமா..” என்று ஆக்ரோஷமாகக் கத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போதைய தமிழக முதல்வர் விஜய்யை ஆபாச வார்த்தைகளால் ஒருமையில் திட்டியும் அவர் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக கரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட நெரிசலில் ஏற்பட்ட அசம்பாவிதங்களைச் சுட்டிக்காட்டி, திமுக தொண்டர் இவ்வாறு வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியுள்ளது அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு எதிராகப் பொதுவெளியில் இத்தகைய அநாகரிகமான மற்றும் வன்முறையைத் தூண்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
