CRIME
“என் காதலுக்கு தடையா..?” வீட்டிலிருந்து வீசிய பயங்கர துர்நாற்றம்… தந்தைக்கு மகள் செய்த கொடூரம்.. கதவை உடைத்த போலீசாருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா சிவில் லைன்ஸ் காவல் எல்லைக்குட்பட்ட கான்ஷிராம் காலனியில், தனது கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தந்தையைக் மகளே கொடூரமாகக் கொலை செய்து, சடலத்தைப் பெட்டியில் அடைத்து வைத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அங்குள்ள டிபி மருத்துவமனை காலனியில் காவலாளியாகப் பணியாற்றி வந்த ஷியாம் சுந்தர் கதேரியா (50) என்பவரின் மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்ற நிலையில், இரண்டு மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது. தற்போதைய நிலையில் அவர் தனது இளைய மகள் பூஜாவோடு வசித்து வந்தார். பூஜாவுக்கு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, அது உடலுறவு ரீதியிலான கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இதனை தந்தை ஷியாம் சுந்தர் கடுமையாக எதிர்த்து வந்ததால், ஆத்திரமடைந்த பூஜா தனது காதலனுடன் சேர்ந்து சுமார் 4-5 நாட்களுக்கு முன்பு தந்தையை அடித்துக் கொலை செய்துள்ளார்.
கொலையை மறைப்பதற்காக தந்தையின் உடலை பாலித்தீன் கவரில் சுற்றி, மூன்று போர்வைகளால் மூடி ஒரு பெரிய பெட்டிக்குள் அடைத்து பூட்டி வைத்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணியளவில், அந்தப் பூட்டிய வீட்டிலிருந்து பயங்கர துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் இருந்த ஷியாம் சுந்தரின் சடலம் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பூஜாவையும் அவரது காதலனையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் மோகத்தால் தந்தை, கணவன், குழந்தைகள் எனப் பலரும் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வரும் இத்தகைய சம்பவங்கள், சட்டத்தின் மீதான பயம் குறைந்து வருவதையே காட்டுவதாகவும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
