LATEST NEWS
அடுத்த ஷாக்..! டெண்டர் விடாமலே ₹2,000 கோடியா.? வெள்ளை அறிக்கை வருது கதறபோறீங்க.. திமுகவின் நெடுஞ்சாலைத்துறை ஊழலைத் தோலுரித்த ஆதவ் அர்ஜுனா..!!
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் தேர்தல் ஆண்டில் மட்டும் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பீட்டிற்கு பேட்ச் வொர்க் நடந்துள்ளதாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், இந்த இமாலயத் தொகையின் மூலம் கடந்த ஆட்சியில் மிகப்பெரிய அளவில் நிதி முறைகேடுகள் அரங்கேறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசின் விதிமுறைகளின்படி, ரூ.10 லட்சத்திற்கு மேல் சாலைப் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதாக இருந்தால் அதற்கு முறையாக டெண்டர் கோரப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், இந்த டெண்டர் நடைமுறைகளைத் தவிர்ப்பதற்காகவே, ஒவ்வொரு திட்டத்தின் மதிப்பீட்டையும் திட்டமிட்டு ரூ.10 லட்சத்திற்குள்ளாகவே காட்டி, தங்களுக்கு வேண்டியவர்களுக்குப் பணிகளைப் பிரித்துக் கொடுத்து இந்த ஊழலைச் செய்துள்ளனர் என்று அவர் விளக்கியுள்ளார்.
நெடுஞ்சாலைத் துறையில் தனித்தனியாகப் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு முறைகேடாக நடத்தப்பட்ட இந்த சாலைப் பணிகளின் பின்னணியில் உள்ள முழு ஊழல்களையும் தவெக அரசு வெளிக்கொண்டு வரும் என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார். மேலும், இந்த ரூ.2,000 கோடி முறைகேடு தொடர்பாக முழுமையான விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை (White Paper) விரைவில் தவெக அரசால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரித்துள்ளார்.
