எம்மடி… 38 பேரைக் கொன்று சாப்பிட்ட சீரியல் கில்லர்.. 70-களின் இடி அமீன் வரலாற்றை நினைவூட்டும் அதிர்ச்சிப் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

எம்மடி… 38 பேரைக் கொன்று சாப்பிட்ட சீரியல் கில்லர்.. 70-களின் இடி அமீன் வரலாற்றை நினைவூட்டும் அதிர்ச்சிப் பின்னணி..!!

Published

on

உகாண்டாவில் 38 பேரை கொடூரமாகக் கொலை செய்து அவர்களின் மாமிசத்தைச் சாப்பிட்ட முஜிரிசி மோசஸ் என்பவனை அந்நாட்டு போலீசார் ஒருவழியாகக் கைது செய்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபட்டு வந்த இவனை, உகாண்டாவின் மிக மோசமான ‘சீரியல் கில்லர்’ என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இவன் செய்த கொடூரக் குற்றங்களுக்காக நிச்சயம் தூக்குத் தண்டனை தான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த 1970-களில் உகாண்டாவின் அதிபராகப் பதவி வகித்த இடி அமீன் என்பவர், தன்னுடைய அரசியல் எதிரிகளைக் கொன்று அவர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டதாக அந்நாட்களில் பெரும் பரபரப்பான செய்திகள் வெளியாகின. அந்த வரலாற்றுச் சம்பவத்தை நினைவூட்டும் வகையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த நபரின் கொடூரச் செயலும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in