LATEST NEWS
“இப்படியும் ஒரு சாவா..?” எறும்ப கடிச்சிருக்கும்னு ஆசால்ட்டா இருந்த தம்பதி.. தலையணைக்கு அடியில மறைஞ்சிருந்த ஆபத்து.. நள்ளிரவில் கணவன்-மனைவிக்கு நடந்த கோர சம்பவம்..!!
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு இரவில் தங்களின் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த கணவன்-மனைவியை விஷப்பாம்பு கடித்துள்ளது. ஆரம்பத்தில் இருவருக்கும் கைகளில் ஏதோ குத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டாலும், அதை எறும்பு கடித்ததாக நினைத்து அவர்கள் அலட்சியமாக விட்டுவிட்டனர். சிறிது நேரம் கழித்து டார்ச்லைட் அடித்துப் பார்த்தபோது படுக்கையில் பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது, இதனால் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் பரையா காவல் நிலையத்திற்குட்பட்ட பிரபுவா கிராமத்தில் நடந்துள்ளது. உயிரிழந்தவர் 41 வயது மதிக்கத்தக்க முன்னா பிரஜாபதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மேஸ்திரி வேலை செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். தகவல்களின்படி, நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் தனது மனைியுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, தலையணைக்கு அருகில் மறைந்திருந்த பாம்பு முதலில் முன்னாவையும், பின்னர் அவரது மனைவியையும் கடித்துள்ளது.
சம்பவம் குறித்து அறிந்ததும் உறவினர்களும் கிராம மக்களும் உடனடியாக இருவரையும் அனுக்கிரஹ நாராயண் மகத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் முன்னா பிரஜாபதியை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். அவரது மனைவியின் உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. இந்த திடீர் விபத்தால் நான்கு குழந்தைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன், அக்குடும்பத்தின் மீது பெரிய துயரம் கவிழ்ந்துள்ளது.
