CRIME
“டிவோர்ஸ் பேப்பரில் கையெழுத்திட வா…” நயவஞ்சகமாக மனைவியை வரவழைத்து.. பைக்கில் இருந்து பெட்ரோல் எடுத்து கணவன் செய்த விபரீதம்.. திருமணமாகி 9 வது மாதத்தில் அரங்கேறிய மெகா கொடூரம்..!!
பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில், இன்ஸ்டாகிராமில் தொடங்கிய காதல் நீதிமன்றத் திருமணத்தில் முடிந்து, இறுதியில் வெறும் 9 மாதங்களிலேயே கணவனால் இளம்பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசாபர்பூரைச் சேர்ந்த தாமினி தேவி மற்றும் சுபாலைச் சேர்ந்த சஞ்சீவ் சா ஆகிய இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், இவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
திருமணமாகி 3 மாதங்களிலேயே தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தாமினி தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றதைத் தொடர்ந்து, இருதரப்பும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், விவாகரத்து பத்திரங்களில் கையெழுத்திட வேண்டும் எனக் கூறி தாமினியை சஞ்சீவ் சுபாலிற்கு வரவழைத்துள்ளார். சனிக்கிழமை மதியம் கணவர் வீட்டிற்கு வந்த தாமினியை, அன்று மாலை சஞ்சீவ் தனது இருசக்கர வாகனத்தில் ஒரு விவசாய வயல் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து, வண்டியில் இருந்து பெட்ரோலை எடுத்து தாமினியின் மீது ஊற்றித் தீ வைத்துள்ளார்.
தாமினியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், அவரை மீட்டு சதர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்குச் தீவிரச் சிகிச்சை பலனின்றி தாமினி பரிதாபமாக உயிரிழந்தார். இறப்பதற்கு முன் அவர் அளித்த வாக்குமூலத்தில், தனது கணவரே தன்னை வரவழைத்துத் தீ வைத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். சம்பவ இடத்திலிருந்து பெட்ரோல் பாட்டில், கிழிந்த துணிகள் மற்றும் செருப்புகளைக் கைப்பற்றியுள்ள போலீசார், தலைமறைவாக உள்ள கணவர் சஞ்சீவை கைது செய்யத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
