LATEST NEWS
அம்மாடியோ.. கரையைத் தாண்டி சீறிய அலைகள்.. சென்னையைச் சூறையாடும் அர்னாப் புயல்.. சாலையில் மிதக்கும் வாகனங்கள்.. திக் திக் வீடியோ..!!
வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல் காரணமாகத் தமிழகத் தலைநகர் சென்னையில், குறிப்பாக வடசென்னை மற்றும் எண்ணூர் கடலோரப் பகுதிகளில் ராட்சத அலைகள் சீறிப்பாய்ந்து கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. தீவிரப் புயலாக மாறியுள்ள அர்னாப் ஆந்திரக் கரையை நோக்கி நகர்ந்தாலும், அதன் தாக்கத்தால் சென்னையின் எண்ணூர் எக்ஸ்பிரஸ்வே மற்றும் கடலோரச் சாலைகளில் கடல் நீர் புகுந்து பெரும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. கரையைத் தாண்டி வந்த அலைகளின் சீற்றத்தால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சரிந்து விழுந்ததுடன், சாலையோரக் கடைகளும் அடித்துச் செல்லப்பட்டுப் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடல் நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் புகுந்துள்ளதால் காசி கோயில் குப்பம், திருவொற்றியூர், பாரதியார் நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் கடுமையான அச்சத்திலும் பீதியிலும் ஆழ்ந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தற்காலிகமாக எண்ணூர் விரைவுச் சாலை மூடப்பட்டுப் போக்குவரத்துப் பாதைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மைத் துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் கடலோரப் பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதுடன், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் யாரும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் காவல்துறை சார்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
