“என்னை ஏன் வீடியோ எடுத்தாய்..?” மெட்ரோவில் ரகசிய வீடியோ எடுத்த காமுகன்.. போனை பிடுங்கி ஓட ஓட விரட்டி தைரியசாலி பெண் செய்த காரியத்தை பாருங்க.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“என்னை ஏன் வீடியோ எடுத்தாய்..?” மெட்ரோவில் ரகசிய வீடியோ எடுத்த காமுகன்.. போனை பிடுங்கி ஓட ஓட விரட்டி தைரியசாலி பெண் செய்த காரியத்தை பாருங்க.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

கர்நாடக மாநிலம் பெங்களூரு நம்ம மெட்ரோ ரயிலில் இளம் பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அந்த இளம் பெண், சக பயணியான ஒரு நபர் தன்னைத் தனது மொபைல் போனில் ரகசியமாகப் படம் பிடிப்பதை கவனித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அந்த நபரை நோக்கிச் சென்று “என்னை ஏன் வீடியோ எடுக்கிறாய்?” என்று தைரியமாகத் தடுத்து நிறுத்திக் கேள்வி கேட்டுள்ளார்.

தான் மாட்டிக் கொண்டதை உணர்ந்த அந்த நபர், ரயில் அடுத்த நிலையத்தை வந்தடைந்தவுடன் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், அந்த இளம் பெண் சற்றும் சளைக்காமல், தனது பையையும் எடுத்துக் கொண்டு அந்த நபரைத் துரத்திச் சென்றுள்ளார். துரத்தும் அவசரத்தில், அந்த நபரின் மொபைல் போனையும் தன் வசப்படுத்திய அந்தப் பெண், மீண்டும் அவரிடம் எதற்காக வீடியோ எடுத்தாய் என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த நபர் முன்னுக்குப் பின் முரணான பதில்களைக் கூறி மழுப்பியதுடன், தான் எதையும் எடுக்கவில்லை என்று சாதித்தார். மேலும், தனது போனை லாக் செய்துவிட்டு, அதைத் திறந்து காட்டுவதாகக் கூறிவிட்டு திடீரென அந்த மெட்ரோ நிலையத்திலிருந்து தப்பியோடிவிட்டார்.

Advertisement

இந்த அதிர்ச்சிகரமான மற்றும் அச்சுறுத்தும் அனுபவம் குறித்து அந்த இளம் பெண் மெட்ரோ நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாகக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனக்கு நேர்ந்த இந்தத் துயரமான சம்பவத்தை மற்றப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு வீடியோவாகப் பதிவிட்டு சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெங்களூரு மெட்ரோ பயணிகளிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in