ரிப்பன் மாளிகையில் உச்சகட்ட மோதல்..! “மாமன்றத்தைக் கலைத்து விடுங்கள்” – ஆணையர் சமீரனிடம் மேயர் பிரியா கடும் சீற்றம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரிப்பன் மாளிகையில் உச்சகட்ட மோதல்..! “மாமன்றத்தைக் கலைத்து விடுங்கள்” – ஆணையர் சமீரனிடம் மேயர் பிரியா கடும் சீற்றம்..!!

Published

on

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு முதலமைச்சர் விஜய் ஆய்வுக்கு வந்தபோது, அதுகுறித்த தகவல் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என மேயர் பிரியா குற்றம் சாட்டியுள்ளார். தனக்குத் தகவல் தராத நிலையில், தானே ஆய்வைப் புறக்கணித்துவிட்டதாகக் கூறுவது எந்த வகையில் சரியாகும் என்று சென்னை மாமன்றக் கூட்டத்தில் அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தத் தகவல் தொடர்பு குறைபாடு மற்றும் புறக்கணிப்பு விவகாரத்தால் கடும் கோபமடைந்த மேயர் பிரியா, “மாமன்றத்தைக் கலைத்து விடுங்கள்” என்று மாமன்றக் கூட்டத்தில் அதிகாரிகளை நோக்கிச் சீறியுள்ளார். மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் போதே இந்த நிலை நீடித்தால் அவையைத் தொடர்ந்து நடத்துவதில் அர்த்தமில்லை என்ற தொனியில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

மாநகராட்சியை முழுமையாகக் கலைத்துவிட்டு, அதிகாரிகளே அனைத்தையும் நேரடியாகப் பார்த்துக் கொள்ளட்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரனிடம் மேயர் பிரியா காரசாரமாகத் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் ஆய்வின் போது மேயர் புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை சென்னை மாமன்றக் கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in