“நன்றி இந்தியா.. நீங்கதான் உருவாக்குனீங்க..” வானத்தில் மிதந்த ஜியோ… வியந்து பார்த்த அனந்த் அம்பானி..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நன்றி இந்தியா.. நீங்கதான் உருவாக்குனீங்க..” வானத்தில் மிதந்த ஜியோ… வியந்து பார்த்த அனந்த் அம்பானி..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

ஜியோவின் பங்குச்சந்தை வெளியீட்டைக் கொண்டாடும் வகையில், புதன்கிழமை மாலை மும்பையின் புகழ்பெற்ற மரைன் டிரைவ் பகுதி வண்ண விளக்குகள் மற்றும் கண்கவர் டிரோன் கண்காட்சியால் ஒளிரச் செய்யப்பட்டது. வானில் ஒருங்கிணைந்த முறையில் பறந்த டிரோன்கள் பல்வேறு வடிவங்களை உருவாக்கி வியப்பில் ஆழ்த்தின. இந்த பிரம்மாண்டக் காட்சியை நேரில் காண நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடலோரப் பகுதியில் திரண்டனர். பலர் இந்தத் தருணத்தை தங்கள் கைப்பேடிகளில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்தனர்.

வான்கடே ஸ்டேடியத்தில் நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சியின் போது, முகேஷ் அம்பானியின் இளைய மகனான அனந்த் அம்பானி, பொதுமக்களுடன் பொதுவெளியில் கலந்துகொண்டு டிரோன் நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தார். ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைநோக்குப் பார்வை மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தைக் குறிக்கும் வகையில் வானில் உருவாக்கப்பட்ட ஒளிரும் வடிவங்கள் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. இந்த விழா மற்றும் மக்களின் உற்சாகமான எதிர்வினைகள், ஜியோவின் பங்குச்சந்தை அறிமுகத்தை ஒரு மாபெரும் பொது விழாவாக மாற்றின.

Advertisement

மேலும், இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக முகேஷ் அம்பானியின் இல்லமான ‘ஆன்டிலா’ கட்டிடமும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கட்டிடத்தின் மீது ஒளி வீசப்பட்ட விளம்பரத் திரைகளில், “நன்றி இந்தியா, ஜியோவை நீங்கள் உருவாக்கினீர்கள்” என்ற செய்தியுடன் ஜியோவின் சின்னங்களும் இடம்பெற்றன. இது பயனர்களுக்கு நிறுவனம் தெரிவிக்கும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in