LATEST NEWS
“ஆடம்பரத்துக்காக கடன் வாங்குனா அவ்ளோதான்!” முதலமைச்சர் விஜயின் சிக்கன நாள் வாழ்த்து செய்தி..!!
உலக சிக்கன நாளை (அக்டோபர் 30) முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், நிதி மேலாண்மையின் முக்கியத்துவம் மற்றும் கடன் வாங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஒருவர் தன் நிதி நிலையை அறிந்து அதற்கு ஏற்றாற்போல செலவழிக்க வேண்டும்; ஆடம்பரத்திற்காகக் கடன் வாங்கினால், அது பெரும் நிதி நெருக்கடியில் தள்ளும்” என்று முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துரையில் மிகவும் ஆழமாக அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு தனிமனிதனும் தங்களின் வருமான வரம்பிற்குள் திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலமே பொருளாதார ரீதியான பாதுகாப்பைப் பெற முடியும் என்பதை இந்தச் செய்தி வலியுறுத்துகிறது.
