இவளெல்லாம் மனுஷியா.? ரூ.22 லட்சம் நகைகளுடன் கள்ளக்காதலனுடன் எஸ்கேப்… பெற்ற பிள்ளைகளை ஆட்டோவிலேயே தவிக்கவிட்டுச் சென்ற கல்நெஞ்சக்காரத் தாய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இவளெல்லாம் மனுஷியா.? ரூ.22 லட்சம் நகைகளுடன் கள்ளக்காதலனுடன் எஸ்கேப்… பெற்ற பிள்ளைகளை ஆட்டோவிலேயே தவிக்கவிட்டுச் சென்ற கல்நெஞ்சக்காரத் தாய்..!!

Published

on

பீகார் மாநிலம் சாரண் மாவட்டத்தில், இரண்டு பெற்ற பிள்ளைகளையும் ஆட்டோவில் தவிக்கவிட்டு, ஒரு பெண் தனது கள்ளக்காதலனுடன் தப்பியோடிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அமித் சிங் என்பவரை 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட அந்தப் பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ரயில் நிலையத்திலிருந்து பிள்ளைகளுடன் ஆட்டோவில் ஏறிய அந்தப் பெண், வழியில் ஆட்டோ ஓட்டுநரிடம் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு மாயமாகியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் தாய் வராததால் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநரும் அப்பகுதி மக்களும் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மாஞ்சி காவல் நிலைய போலீசார், முன்பின் தெரியாத நபர்களுக்கு மத்தியில் அழுதுகொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் மீட்டுத் தங்களது பாதுகாப்பில் எடுத்துக்கொண்டனர். பின்னர், குழந்தைகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அவர்களின் தந்தை அமித் சிங்கிற்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர் காவல் நிலையம் வரவழைக்கப்பட்டார்.

Advertisement

காவல் நிலையத்தில் தனது இரு பிள்ளைகளையும் பத்திரமாகப் பார்த்த தந்தை அமித் சிங், கண்ணீர் விட்டு கதறி அழுதார். மேலும், தனது மனைவி வீட்டில் இருந்த சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைச் சுருட்டிக்கொண்டு கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதாக அவர் போலீசாரிடம் திடுக்கிடும் புகாரை அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், நகைகளுடன் தலைமறைவான பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in