LATEST NEWS
“போர் கொடியது” ரஷ்யாவின் கொடூர தாக்குதல்: மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சம் புகுந்த ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ பிரபல நடிகர் நிக்கோலாஜ்..!
பிரபல ‘Game of Thrones’ தொடரில் ‘ஜேமி லானிஸ்டர்’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் நிக்கோலாஜ் கோஸ்டர்-வால்டவ், உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்வில் உள்ள சுரங்கப்பாதை (மெட்ரோ) ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அங்குள்ள பொதுமக்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தற்காலிக முகாமில் அவர் இரவு முழுவதையும் கழித்துள்ளார். ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) நல்வண்ணத் தூதராகப் பணியாற்றி வரும் இவர், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் நிலையை நேரில் அறிந்துகொள்ள அங்கு சென்றுள்ளார்.
சுரங்கப்பாதையில் தங்கியிருந்த தனது கடினமான அனுபவத்தையும், அங்கிருந்த புகைப்படங்களையும் அவர் தனது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “போர் கொடியது.தமக்கு இது ஒரு இரவு மட்டுமே, ஆனால் பல்லாயிரக்கணக்கான உக்ரைன் மக்களுக்கு இது அன்றாட வாழ்க்கையின் அவசியமான தேவையாக மாறியுள்ளது” என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும், குளிர்காலம் நெருங்கி வருவதால், போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் குடிமக்களுக்கு சர்வதேச சமூகம் தொடர்ந்து உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
