CRIME
அடக்கடவுளே..! குடும்பத் தகராறால் நேர்ந்த விபரீதம்.. கரண்ட் ஷாக் வைத்து.. கோடரியால் அடித்துக் கொன்ற கணவன்.. 9 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்..!!
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட நௌஹதியா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக கணவனும் மனைவியும் இடையே ஏற்பட்ட மோதலில், கணவன் தனது மனைவியை மிகவும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். உயிரிழந்த பெண் வசந்தி தேவி என்றும், இவர்களுக்கு 9 குழந்தைகள் உள்ளனர் என்றும், குற்றம் சாட்டப்பட்ட கணவர் மனோஜ் ரஜ்வார் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிடைத்த தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் ரஜ்வார் வியாழக்கிழமை காலை உறவினர் வீட்டிலிருந்து திரும்பியுள்ளார். அன்று இரவு சாப்பிட்ட பிறகு, கணவன்-மனைவிக்கிடையே ஏதோ ஒரு விசயம் தொடர்பாக வாக்குவாதம் தொடங்கியுள்ளது. இந்த விவாதம் முற்றிய நிலையில், குற்றம் சாட்டப்பட்ட கணவன் முதலில் தனது மனைவிக்கு மின்சாரம் பாய்ச்சியதாகவும், பின்னர் கோடரியால் தாக்கி அவரைப் படுகொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், வீட்டின் பிரதான கதவிலும் மின்சாரம் பாய்ச்சப்பட்டிருந்தது, இதனால் யாரும் உள்ளே நுழைய முடியாதவாறு தடுக்கப்பட்டிருந்தது.
இந்தக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றிய பிறகு, குற்றம் சாட்டப்பட்ட கணவர் தானும் கத்தியால் குத்தித் தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெள்ளிக்கிழமை காலை தகவல் கிடைத்ததும் நாராயண்பூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தனர். காயமடைந்த மனோஜ் ரஜ்வாரைக் கைது செய்த போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
