CRIME
“தொழிலதிபர்னு சொன்னான், ஆனா…” நேரில் பார்த்ததும் அலறி ஓடிய வெளிநாட்டுப் பெண்.. டேட்டிங் ஆப்பில் நடந்த கூத்து..!!
வெளிநாட்டுப் பெண் ஒருவர் திருமணத்திற்காக ஒரு டேட்டிங் செயலியில் இணைந்துள்ளார். அங்கு அறிமுகமான ஒரு வாலிபர் தன்னை ஒரு பெரிய தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதால், இருவரும் ஒரு ஹோட்டலில் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அவரைச் சந்திக்கும் ஆவலோடு மிகுந்த உற்சாகத்துடன் வந்த அந்தப் பெண்ணிற்கு, வாலிபரைக் கண்ட அடுத்த கணமே ஏமாற்றமே மிஞ்சியது. அந்த வாலிபரின் நிஜ வாழ்க்கை அவர் இணையத்தில் கூறியதற்கு முற்றிலும் மாறாக இருந்தது மட்டுமன்றி, அவரது உடலில் இருந்து வீசிய கடுமையான துர்நாற்றம் காரணமாக அந்தப் பெண் அந்தச் சந்திப்பை பாதியிலேயே தவிர்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
இந்தச் சம்பவம் தற்பொழுது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தவறு யாருடையது? இணையத்தில் யாரோ ஒரு அந்நியன் கூறிய வார்த்தைகளை அப்படியே நம்பிய அந்தப் பெண்ணின் அறியாமையா? அல்லது ஆரம்பத்திலேயே தனது உண்மையான நிலைமையைக் கூறாமல் ஏமாற்றிய அந்த வாலிபரின் துரோகமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக ஊடகங்களில் பழகும் நபர்களின் உண்மைத் தன்மையை ஆராயாமல் அவசரப்பட்டு நேரில் சந்திப்பது எந்த மாதிரியான ஏமாற்றங்களை உருவாக்கும் என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு முக்கிய உதாரணமாக மாறியுள்ளது.
