LATEST NEWS
“வியூஸ்காக இப்படியா பண்ணுவாங்க..?” நம்ப வச்சு முதுகில் குத்திய அமெரிக்க யூடியூபர்.. கதறி அழுத இந்திய பெண்.. இணையத்தைக் குலுக்கும் வீடியோ..!!
இந்திய சமூக ஊடகப் பிரபலமான ஷிவானி குமாரிக்கும், அவரது வீட்டிற்கு விருந்தினராக வந்த அமெரிக்க யூடியூபரும் ஃபிட்னஸ் கோச்சுமான மார்வின் ஆச்சிக்கும் இடையே வெடித்துள்ள புதிய சர்ச்சை தற்பொழுது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவிற்குத் திரும்பிய மார்வின், இந்தியாவில் ஷிவானி தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். உள்ளூர் திருவிழா ஒன்றில் தனது முகத்தில் கரியைப் பூசி, தனது மனைவியின் மீது மணலை வீசி வதவதவென வியூஸ்களுக்காகத் தங்களை வைத்து ஷிவானி விளையாடி அவமானப்படுத்திவிட்டதாகவும், இந்தியப் பாரம்பரியமான ‘அதிதி தேவோ பவ’ என்ற விருந்தோம்பலை அவர் மீறிவிட்டார் என்றும் மார்வின் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து ஷிவானி குமாரி சமூக வலைத்தளத்தில் கண்ணீர் மல்க ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், மார்வினைத் தனது சொந்த வீட்டில் 15 நாட்கள் தங்க வைத்து, தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து அன்போடு உபசரித்ததாகவும், தங்களுக்குள் ஏதேனும் வருத்தம் இருந்தால் அதைத் தன்னிடம் நேரடியாகக் கேட்காமல், அமெரிக்கா சென்ற பிறகு டாலர்களுக்காகவும் வியூஸ்களுக்காகவும் இப்படிப் பொதுவெளியில் வீடியோ போட்டுத் துரோகம் செய்வது நியாயமா என்று கதறியுள்ளார். மேலும், முகத்தில் மை வைப்பது கிராமத்து கலாச்சாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதிதானே தவிர, யாரையும் அவமானப்படுத்த அல்ல என்று அவரது ஆதரவாளர்கள் மார்வினுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
