CRIME
ஐயோ கடவுளே.. பண்டிகை பொருட்கள் வாங்கச் சென்ற இடத்தில் கொடூரம்… தாயும் 2 வயது மகனும் துடிதுடிக்க மரணம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில், சிகந்திரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரடோனி பகுதி அருகே நடந்த கொடூரமான சாலை விபத்தில் தாயும் அவரது 2 வயது மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். 23 வயதான அஞ்சு தேவி என்ற பெண், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கர்வா சௌத் பண்டிகைக்கான பொருட்களை வாங்குவதற்காக வெளியே சென்றுள்ளார். பொருட்கள் வாங்கிவிட்டு அரடோனி அருகே சாலையின் நடுவே இருந்த இரும்புத் தடுப்பை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மிக பலமாக மோதியுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் விபத்தில் அஞ்சு தேவியும், அவரது 2 வயது கைக்குழந்தையான அன்ஷும் சம்பவ இடத்திலேயே உடல நசுங்கி கொடூரமாக உயிரிழந்தனர். இவர்களுடன் இருந்த 5 வயது மகள் அகங்க்ஷா பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகனும் காரில் சிக்கி பலியான இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கார் ஓட்டுநரை சிகந்திரா போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
