CRIME
“என் மகள் லண்டனில் இருக்கிறாள்…” என நம்பிய பெற்றோர்.. புனே பிளாட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 34 வயது பெண்.. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள லோதா சொசைட்டி குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 34 வயதான முக்தா தேஷ்முக் என்ற பெண்ணின் உடல் மிகவும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்தா லண்டனில் எம்பிஏ படித்து வருவதாகவே அவரது குடும்பத்தினர் கடந்த சில மாதங்களாக நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர் லண்டன் செல்லாமல் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே புனேவில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ரகசியமாகத் தங்கி வாழ்ந்து வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த அக்டோபர் 23 அன்று முக்தா தனது பெற்றோருடன் கடைசியாகப் பேசியுள்ளார், அதன்பின்னர் அவரது மொபைல் போன் முற்றிலும் அணைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், அவர் தங்கியிருந்த பிளாட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து போலீசார் கதவை உடைத்துச் சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர். முக்தா எவ்வாறு இறந்தார், தற்கொலையா அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்த காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து புனே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
