ஐயோ கடவுளே.. மதியம் காணாமல் போன 3 வயது சிறுமி… மாலையில் தோட்டத்தில் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ கடவுளே.. மதியம் காணாமல் போன 3 வயது சிறுமி… மாலையில் தோட்டத்தில் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில், 3 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹமிர்பூரின் முஸ்குரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடிய நிலையில், மாலையில் அங்குள்ள துவரைக்காட்டில் அச்சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த ஹீரா என்ற நபர் மீது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தடய அறிவியல் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இக்கொடூரச் செயலால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள், காவல் துறையினரின் வாகனங்களை அடித்து நொறுக்கி தங்களின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனிடையே, குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீஸார் தடுத்துக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in