CRIME
கொடூரத்தின் உச்சம்..! “உல்லாசமா இருக்கலாம் வா” தனிமையில் அழைத்து கள்ளக்காதலியை முட்புதருக்குள் தள்ளி கழுத்தை நெரித்துக் கொன்ற பாவி.. மானாமதுரையில் பரபரப்பு..!!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், வைகையாற்று முட்புதருக்குள் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 31 வயது பெண் முத்துலட்சுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வழக்கில் அவரது கள்ளக்காதலன் மாசானத்தை மானாமதுரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் அரியூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமிக்கும், அதே ஊரைச் சேர்ந்த மாசானத்திற்கும் இடையே ஏற்பட்ட திருமணத்திற்குப் புறம்பான உறவு காரணமாக, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மானாமதுரையில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
நாளடைவில் முத்துலட்சுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த மாசானம் அவருடன் தகராறு செய்துவிட்டுச் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இதனால் தவித்துப் போன முத்துலட்சுமி, தனது கணவர் சரவணனைத் தொடர்புகொண்டு சமாதானம் செய்து, அவரை மானாமதுரைக்கு வரவழைத்து மீண்டும் அவருடன் குடும்பம் நடத்தத் தொடங்கியுள்ளார். இதையறிந்த மாசானம் மீண்டும் முத்துலட்சுமியைத் தொடர்புகொள்ள முயன்றபோது அவர் பேச மறுத்ததால், நேரில் பேசுவதற்காக வைகையாற்றுப் பகுதிக்கு வருமாறு அவரை அழைத்துள்ளார்.
வைகையாற்றுப் பகுதியில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த மாசானம் முத்துலட்சுமியை முட்புதருக்குள் தள்ளித் தாக்கி, துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளார். முத்துலட்சுமி மயக்கமடைந்து உயிரிழந்துவிட்டதாக நினைத்த மாசானம், அவரை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடியுள்ளார். முட்புதரில் உயிருக்குப் போராடிய முத்துலட்சுமியை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, தனிப்படை அமைத்துத் தேடி வந்த போலீசார் மாசானத்தை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
