“எல்லாரையும் திருப்திப்படுத்த ஐஸ்கிரீம் தான் விற்கணும்..” ராமாயணா பாடலை விமர்சித்தவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த தடாலடி பதில்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“எல்லாரையும் திருப்திப்படுத்த ஐஸ்கிரீம் தான் விற்கணும்..” ராமாயணா பாடலை விமர்சித்தவர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த தடாலடி பதில்..!!

Published

on

நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ‘ராமாயணா’ திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் சில பாடல்கள் மற்றும் இசை வெளியீட்டிற்குப் பிறகு இணையத்தில் சில விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்தன. இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் புகழ்பெற்ற மேற்கோளை சுட்டிக்காட்டிய ஏ.ஆர். ரஹ்மான், “நீங்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த விரும்பினால், போய் ஐஸ்கிரீம் விற்க வேண்டும்” என்று கறாராகவும் தெளிவாகவும் தனது கருத்தைத் தெரிவித்தார்.

ஒரு திரைப்படத்திற்கோ அல்லது குறிப்பிட்ட சூழ்நிலைக்கோ இசையை உருவாக்குவது எளிதல்ல என்றும், அதற்கு நீண்ட நாள் சிந்தனை மற்றும் உழைப்பு தேவைப்படுகிறது என்றும் அவர் பேட்டி ஒன்றில் விளக்கியுள்ளார். தான் இயற்றும் ஒவ்வொரு இசையையும் பல மாதங்களாகத் தாங்கள் வாழ்ந்து பார்த்து, அதன் பின்னரே இறுதி வடிவம் கொடுப்பதாகக் கூறிய அவர், “நானே எனது முதல் விமர்சகர். நான் செய்யும் எல்லாவற்றையும் உடனடியாக நான் விரும்பிவிட மாட்டேன். சில விஷயங்களுக்கு மானுடவியலையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

சில இசை அமைப்புகள் மற்றும் பாடல்கள் ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு உடனடியாகப் புரியாமல் போகலாம் என்றும், ஆனால் காலப்போக்கில் அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ரஹ்மான் ஒப்பீடு செய்துள்ளார். ஊறுகாய் எப்படி காலம் செல்லச் செல்ல அதன் சுவை கூடுகிறதோ, அதேபோல சில மெட்டுகளும் பாடல்களும் காலம் கடக்கக் கடக்கவே அதன் உண்மையான ஆழமும் அர்த்தமும் புரியவரும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in