ஹாலிவுட் இசையமைப்பாளருக்கே டஃப் கொடுக்கும் ரஹ்மான்..!” – ராமாயணா படத்திற்காக வாங்கிய தலைசுற்றவைக்கும் சம்பளம்….! – cinefeeds
Connect with us

CINEMA

ஹாலிவுட் இசையமைப்பாளருக்கே டஃப் கொடுக்கும் ரஹ்மான்..!” – ராமாயணா படத்திற்காக வாங்கிய தலைசுற்றவைக்கும் சம்பளம்….!

Published

on

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் சன்னி தியோல் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ராமாயணா’. இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இத்திரைப்படம் சுமார் 4,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

சமீபத்திய தகவல்களின்படி, ‘ராமாயணா’ படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் சுமார் 30 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது பொதுவாக ஒரு இசையமைப்பாளர் வாங்கும் ஊதியத்தை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இந்தப் பிரம்மாண்ட படத்தின் லாபத்திலும் அவருக்கு குறிப்பிட்ட சதவீதம் பங்கு (Profit Share) வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

Advertisement

உலகத்தரம் வாய்ந்த இசையை வழங்கும் நோக்கில், ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தில் பணியாற்றி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக ஒரு படத்திற்கு 12 முதல் 15 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் ரஹ்மான், இந்தப் படத்தின் பிரம்மாண்டம் மற்றும் உழைப்பைக் கருத்தில் கொண்டு இவ்வளவு பெரிய தொகையைப் பெற்றுள்ளார். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த காவியத் திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in