உச்சகட்ட பயங்கரம்..! “ஒரே வீட்டில் 4 பேரை கொன்றுவிட்டு” தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்… என்ன நடந்தது..? பெரும் பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

உச்சகட்ட பயங்கரம்..! “ஒரே வீட்டில் 4 பேரை கொன்றுவிட்டு” தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்… என்ன நடந்தது..? பெரும் பயங்கரம்..!!

Published

on

மத்தியபிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள மாலிகேடி பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை வாலிபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட பெரும் அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாலிகேடி பகுதியைச் சேர்ந்த நரேந்திர சாஹு (35) என்பவர், தன் குடும்பத்தினருடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக, தனது தாயார் சரஸ்வதி (50), மனைவி சோமலதா (29), மகள் கீர்த்தி (10) மற்றும் மகன் குஷ் (6) ஆகிய 4 பேரையும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

Advertisement

தன் குடும்பத்தினர் 4 பேரையும் கொலை செய்த பின்னர் நரேந்திர சாஹுவும் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போபால் போலீசார், இந்த கொடூரக் கொலை மற்றும் தற்கொலைக்கான முதன்மைக் காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in